காவல்துறையினர் கலவர தடுப்பு ஒத்திகை
திருச்சி, ஆக. 31 திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கு சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை எப்படி கையாள்வது என்ற ஒத்திகையுைம் (MOB Operation), அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்வது உள்ளிட்ட ஒத்திகையானது திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி மேற்பார்வையில் திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் என 575 நபர்களை கொண்டு தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேற்படி ஒத்திகை நிகழ்ச்சியின் போது துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை ஆணையர், (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத கூட்டத்தை கையாளும் ஒத்திகையின்போது, திருச்சி மாநகர காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்கள்.