கடோலினியம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கும் விழா
திருச்சி, ஆக.11 கடோலினியம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் – GD GROUPS சார்பில் “Gadolinium Impact Awards 2026” விருது வழங்கும் விழா, திருச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்வி, சமூக சேவை, மருத்துவம், தொழில், மகளிர் முன்னேற்றம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 55 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு Gadolinium Foundation Trust நிறுவனர் திருமதி கோமதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக Lion Prasheenth Ravichandran, Dr. G. Vishwa, மற்றும் Mr. Rajabharathi ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களை பாராட்டி விருதுகளை வழங்கினர்.
“Together We Rise” என்ற நோக்கத்துடன் சமூக முன்னேற்றம், கல்வி, மகளிர் முன்னேற்றம் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவோம் என்று நிறுவனர் தெரிவித்தார்.