பால்பண்ணை பகுதியிலுள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி, ஆக. 11 பா.ம.க. சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், திருச்சி காந்தி மார்கெட் to தஞ்சை-ரோடு பால்பண்ணை -யில் அமைந்திருக்கும் தனியார் M.P மனமகிழ் மன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில் கடந்த ஆக. 7 ஆம் தேதி அன்று இரவு 8.00 மணி அளவில் மன மகிழ் மன்றத்தில் சட்ட விதியின் படி (21 வயது) பூர்த்தி ஆனவர்களுக்கு மட்டுமே மது விற்க வேண்டும். ஆனால் வெள்ளிகிழமை 7.8.2026 அன்று இரவு 8.00மணியளவில் ரமேஷ் என்பவர் 19 வயது பூர்த்தி ஆகாத மாணவனுக்கு மதுவை விற்றதுடன். அங்கே சட்டம் ஒருங்கு பிரச்சனை உருவாகி. மனமகிழ் மன்ற குண்டர்களை வைத்து அந்த மாணவனை அடித்து காயப்படுத்தி உள்ளனர். இரத்த காயத்துடன் வந்த மாணவன் அரசு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டான். மாணவர் அளித்த புகாரின் பேரில்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். ஆனால் சனிக்கிழமை 8/8/2026 அன்று மாணவனை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மிரட்டி புகாரினை திரும்ப பெற செய்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்யாமல் மனமகிழ் மன்றத்துக்கு காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் காந்திமார்க்கெட் காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எனவே தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாக்கி வரும் தனியார் நடத்தும் மனமகிழ் மன்றத்தை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.