மத்திய மாவட்டம் மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, ஆக.3 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல் கே எஸ் மஹாலில் மேற்கு தொகுதி மத்திய மாவட்டம் மாநகர திமுக. பொது உறுப்பினர்கள் கூட்டம் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி முன்னிலையில் நேற்று (செப்.2) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் துரைராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..