குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் பேட்டி

0 577
Stalin trichy visit

திருச்சி, ஆக. 3  திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள மற்றும் கண்காணிப்பு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்ச்ர மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் திருச்சி மதுரை பரிசோதனை செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சோதனை செய்துள்ளோம்

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு இதுவரை 11 ஆயிரம் பேர் அதிக அளவில் இருக்கிறது ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. என்று கூறினார்.

பேட்டியின்   மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்டல தலைவர் மதிவாணன் மற்றும் கட்சி நிருவாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.