நிதி நிறுவன ஊழியரை கைது செய்ய கோரி சி.பி.எம். கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 338
Stalin trichy visit

திருச்சி, செப். 4 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(45) இவர் இவர் வாட்ச்மேனாக வேலை செய்கிறார். இவரது மனைவி விசாலாட்சி(40) சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக விசாலாட்சி கடந்த 2022 ஆண்டில் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் சுய உதவி குழுவில் 40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் மாதம்  ரூ2,200  வீதம் மாத தவணை கட்டி வந்த நிலையில் தற்போது மீதி 4 தவணை இருக்கும் பட்சத்தில் இந்த மாத தவணையை அந்த நிதி நிர்வன ஊழியர் சுரேந்தர் என்பவர் தீராம்பாளையத்தில் உள்ள விசாலாட்சி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு நீ இறந்துவிட்டால் இன்ஷூரன்ஸ் பணம் வரும் அதை நாங்கள் கிளைம் செய்து கொள்கிறோம் என கூறி விசாலாட்சி வீட்டுக்குள் வைத்து வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றார். இதில் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி கடந்த 1 ம் தேதி யாரும் இல்லாத போது வீட்டில் அரளி விதையை அரைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள நிதி நிர்வன அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் நிதி நிறுவனத்தின் அராஜகம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் திருவெள்ளறையில் டீ மாஸ்டர் மனைவி, ஜூலை மாதம் கிழக்கு காமராஜர் நகரை சேர்ந்த தாய், மகன், மகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்ற மாதம் நொச்சியத்தில் ஒரு பெண் என மகளிர் சுய உதவி குழு ஊழியர்கள் கொடுக்கும் நெருக்கடி தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தீராம்பாளையம் கிராமத்தில் விசாலாட்சி தற்கொலைக்கு தூண்டுதலாக நிதி நிறுவனர் ஊழியரை கைது செய்ய காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.