தொட்டியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

0 250
Stalin trichy visit

திருச்சி, செப். 7 திருச்சி மாவட்டம்,  தொட்டியத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு நேற்று  கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன்,
ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, நிர்வாகி பிரபாகரன், தா.பேட்டை ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் விஜய்ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் தலைமை செய்ய வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினர். அதனைத் தொடர்ந்து பேசிய எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தொண்டர்களின் பொறுப்புகள் குறித்து விரிவாக பேசினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக சென்று கலந்து கொள்வது, இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க கேட்டுக்கொள்வது, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவது, செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவது, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது,
இளைஞர்களை திமுகவில் அதிகமாக சேர்ப்பது,
செயல்படாமல் இருக்கும் தொட்டியம் ஒன்றிய செயலாளர்
தங்கவேல் என்பவரை நீக்கி புதிய ஒன்றிய செயலாளரை நியமிக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை மாவட்ட பிரதிநிதி
பெரியண்ணன் வாசித்தார்.
கூட்டத்தில் தொட்டியம் நிர்வாகிகள் குருமூர்த்தி, பிரபாகரன், மகாமணி, கோபால், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், ஷர்மிளா, கண்ணன், ராமன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.