பொன்னம்பட்டி பேரூர் கழகம் பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி பேரூர் கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கட்சியின் இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் துவரங்குறிச்சி தனியார் திருமண மஹாலில் அவைத்தலைவர் பழ. கருப்பையா தலைமையில் நடைபெற்றது.
பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் மும்பை நாகராஜ் வரவேற்றார். கூட்டத்தில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசனைகளும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்றதைப்போல் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 ம் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உழைக்க வேண்டும் எனவும் அதற்கு கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், உட்கட்டமைப்புகள் குறித்தும் வாக்காளர்களுக்கு எடுத்து கூறி திமுக விற்கு ஆதரவு திரட்ட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும், மணப்பாறை தொகுதி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அமைத்துக்கொடுத்தும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெற்றிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வெற்றிக்கும் ஒன்றிய,நகர ,பேரூர் கழக ,பகுதி கழக, வாரியாக தீவிர வாக்கு சேகரிப்பு செய்த அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நன்றி தெரிவித்தும், பொன்னனியார் அணை மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும் ,ஒருங்கிணைந்த மாவட்ட கிளை நீதிமன்றத்தை துவரங்குறிச்சியில் அமைத்திட தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தும் பொன்னம்பட்டி பேரூர் கழகம் சார்பில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா சிறப்புரை ஆற்றினார். இதில் வண்ணை அரங்கநாதன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன்,பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜ்,நகர துணைச் செயலாளர் ராஜா முகமது, பேரூராட்சி உறுப்பினர் அப்துல் சலாம்,முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் மாலிக்,ஒன்றிய பிரதிநிதி நல்லதம்பி, மற்றும் திமுக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.