ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

0 240
Stalin trichy visit

திருச்சி, செப். 7 திருச்சி உறையூர் கீழவை கோள்காரர் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா தொடக்கமாக 5ம் தேதி பாலாலயம் நடைபெற்று காலை 6 மணி அளவில் திருச்சி காவேரி ஆற்றில் இருந்து பக்தர்களால் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு முதல் கால யாகம் தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது ‌ மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் அன்னதானம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.