மணப்பாறை நகர திமுக பொது உறுப்பினர் கூட்டம்

0 183
Stalin trichy visit

திருச்சி, செப். 7 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர திமுக சார்பில் இரண்டாவது பொது உறுப்பினர் கூட்டம் விராலிமலை சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்கான ஆயத்தமாக நடந்த கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.

நகர கழக செயலாளர் மு.ம.செல்வம் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமிக்க வலியுறுத்தியும், கலைஞர் 100 விழாவை சிறப்பாக நடத்திய மாவட்ட கழகத்தை பாராட்டியும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட பரிந்துரை செய்த தமிழக அரசையும் மத்திய அரசையும் பாராட்டியும், மேலும் கலைஞருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்ற மாவட்ட கழக தீர்மானத்தை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மாவட்ட அவைத் தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன் மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சபிபுல்லா நகர்மன்றத் தலைவர் கீதாமைக்கேல்ராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துலட்சுமி கோபி மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ண கோபால் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.