மூலிகைக் கரைசல்: வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்
திருச்சி, செப். 9 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரிகே பூனாம்பாளையம் கிராமத்தில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விவசாயிகளுக்கு மூலிகைக் கரைசல் செய்முறை செய்து காட்டினர்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி, விக்னேஷ்வரி, அபிநயா, கயல்விழி, ரேணுகா தேவி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விவசாயம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்களை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பூனாம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மூலிகைக் கரைசல் செய்முறை செய்து காட்டினர்.
இம்மூலிகைக் கரைசலை பூக்கள் செடியில் நீடித்து நின்று காய்கள் நிறைய காய்க்கப் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:2 பனம்பழம், 10 குமுட்டுக்காய், 1 லிட்டர் பால், 6-7 லிட்டர் கோமியம், 1/2 கிலோ வெள்ளம், 1 கற்றாழை 1 கிலோ மாட்டுச் சாணம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்ற பொருட்களைக் கலக்கி மூடி வைக்கவும். ஏழு நாட்களுக்கு தினமும் ஒரு முறை கலக்கி விட வேண்டும். 7 ஆவது நாள் கரைசலை வடிகட்டி முக்கால் லிட்டர் கரைசலை தெளிப்பானில் ( 16 லிட்டர் sprayer) ஊற்றி செடிகளுக்குத் தெளிக்க வேண்டும். இதனைப் பூப்பூத்தப் பிறகு தெளிக்கத் தொடங்கி 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இந்த அளவை இரண்டு ஏக்கர் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் பூக்கள் செடியில் தங்கி அதிக மகசூலைக் கொடுக்கும். இதனை கத்திரி, வெண்டை, புடலங்காய், சுரைக்காய் மற்றும் இதர செடிகளில் பயன்படுத்தலாம்.