புனித மரியன்னை பேராலயத்தின் தேர் பவனி
திருச்சி, செப். 9 திருச்சி மறை மாவட்டம் மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித மரியன்னை பேராலயத்தின் பங்கு பெரு விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்று விழா கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை மறை மாவட்டம் மேதகு ஆயர் சகாயராஜ் கலந்துகொண்டு புனித கொடியை ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று மாலை புனித மரியன்னை பேராலயத்தின் தேர் பவனி பேராயர்களால் புனிதப்படுத்தப்பட்டு ஊர்வலமாக பங்கு மக்களால் கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அருள்பணி சவரிராஜ் மற்றும் உதவி பங்கு தந்தை அருள் பணி சகாய ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு பிராத்தனை செய்து தேர் பவணியை தொடங்கி வைத்தனர்.
முதல் தேரில் மைக்கேல் சம்மனசும், இரண்டாவது தேரில் சூசையப்பரும் மற்றும் கடைசி தேரில் தூய மரியன்னை வீட்டிருந்து பங்கு மக்களுக்கு காட்சியளித்தார் . அதனைத் தொடர்ந்து பங்கு மக்கள் தேர்களை இழுத்து ஊர்வலமாக சென்றனர்.
இந்த தேரானது முக்கிய வீதிகளான மேலப்புதூர் சாலை, பீமநகர் சாலை பாலக்கரை சாலை, மற்றும் வேர்ஹவ்ஸ் சாலை வழியாக மீண்டும் பேராலயத்தை வந்து அடைந்தது. இந்த தேர் பவணியில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஆலயத்தில் பங்கு மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.