விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை

0 172
Stalin trichy visit

திருச்சி, செப். 9  திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நூதன முறையிலான வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சி பெரியகடைவீதி, மாப்பிள்ளை நாயகன் குளத்தெருவில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் நண்பர்கள் குழு சார்பில் 32ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. . 10 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றது

. இதன் ஒரு பகுதியாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.மாலை 6:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர். இதில், மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குல விருத்தி, சகல தோஷ நிவர்த்தி, நோய் நிவர்த்தி கிடைக்க வேண்டி பெண்கள் குத்துவிளக்கேற்றி விநாயகரை வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.