ராம்ஜிநகர் அருகே உள்ள வண்ணங்கோவிலில் வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஈரோட்டை சேர்ந்த சவுந்தர்யா என்கிற மாணவி வேளாண்மை துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டு வந்த இவர் பூச்சி மருந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.