திருவெறும்பூர் தொகுதியில் குடிநீர் சாலை வசதி கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனு
தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் தேவை மற்றும் சாலை வசதி தொடர்பாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவை தலைமை செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61 முதல் 65 அவரை உள்ள வார்டு பொதுமக்களின் கோரிக்கையான பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து சாலை வசதியை துரிதமாக போட உத்தரவுயிட வேண்டும் என்றும் அதே போல் தொகுதி முழுவதும் காவேரி குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் தொடர்ந்து பல்வேறு தேவைகளை தொகுதியில் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் மக்கள் மற்றும் நல சங்கங்கள் கழக நிர்வாகிகள் தங்களின் குறைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மனுக்களாக அளித்தனர் அந்த மனுக்களை பட்டியலிட்டு அவற்றை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றி தருமாறும் கேட்டுக்கொண்டார்.