தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் – 400க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

0 759
Stalin trichy visit

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்கள் பலர் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி கொண்டு வருகின்றனர்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி தேசிய கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.
இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 400க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி, பேராசிரியர் குணசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.