திருவெறும்பூர் அருகே காதலியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய காதலன் கைது!
திருச்சி மாவட்டம் துவாக்குடி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சந்தியா, இவர் தனது குடும்ப நண்பரான எழில் நகரைசேர்ந்த சதீஷ் என்பவருடன் பழகி வந்தார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர்.இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்ப்பதற்காக சந்தியா சென்றுள்ளார்.
இதேபோல் சதீஷ்குமாரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சென்றுள்ளார்.அங்கு சந்தியாவிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி உள்ளார்.
மேலும் இருவரும் ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் இருவரும் நெருக்கமாக இருந்தபோது சதீஷ் தன்னுடைய செல்லில் வீடியோ எடுத்து வைத்துள்ளான்.இதனிடையே சதீஷ் தான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அதே பெண்ணை கல்யாணம் செய்து வருவதாகவும் சந்தியாவிடம் கூறியுள்ளார்.
அவருக்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த சந்தியா பின்னர் சம்மதம் தெரிவித்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு சதீஷ் அவர் காதலித்த வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
சதீஷ் தனக்கு திருமணம் ஆன பிறகு சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சந்தியாவிடம் செல்போனில் பேசி பழகி வந்துள்ளான். மேலும் சந்தியாவிடம் என்னுடன் பழக வில்லை என்றால் உன்னுடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் உனது தாய் தங்கை ஆகியோரை ஆபாச படம் எடுத்து தரும்படி வலியுறுத்தியுள்ளார். மிரட்டுலுக்கு பயந்துபோன சந்தியா வேறு வழியின்றி அவரும் சம்மதித்து அதுபோன்ற படங்களை எடுத்து அனுப்பி உள்ளார்.இந்த விஷயம் சந்தியாவின் வீட்டிற்கு தெரியவரவே, இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சதீஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவனின் செல்போனை பறிமுதல் செய்தனர்.
மேலும் சதீஷ் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 2 பிரிவிகளிலும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு பிரிவிலும் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.