திமுக பொறியாளர் அணி சார்பில் திருச்சி மண்டலம் ஆய்வுக் கூட்டம்

0 347
Stalin trichy visit

திருச்சி, செப்.14  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக பொறியாளர் அணி சார்பில் திருச்சி மண்டலம் ஆய்வுக் கூட்டம் மாநில இணை செயலாளர் பரமேஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.   இக்கூட்டத்தில் திருச்சி மண்டலம், அரியலூர், பெரம்பலூர்,நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் பரமேஸ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்.  திராவிட ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொறியாளர் அணியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொறியாளர் அணிக்கு மாநிலம் முழுவதும் நகர, ஒன்றிய, பேரூர் கழகப் பொறுப்புகளை நேர்காணல் செய்து புதிய முகங்களை தேர்ந்தெடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறியாளர் அணியில் இணைத்திட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மாநில பொறியாளர் நிர்வாக அணியினர் ஒவ்வொரு மண்டலமாக சென்று அங்கு இருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அதில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டியும், செயல்படாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு அடுத்த கட்ட நிர்வாகத்தை எப்படி நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

திமுக பொறியாளர் அணியின் அடுத்த கட்ட நிர்வாகத்தில் நிறைய இளைஞர்களை சேர்க்கும் வண்ணம் (QR code)மூலமாக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த (QR code)மூலமாக தமிழ்நாட்டில் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பொறியாளர்கள் அவரவர் பகுதியை தேர்ந்தெடுத்து அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் பணியாற்றக்கூடிய தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து பொறுப்புகள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாநில தலைவர் சரவணன்,மாநில செயலாளர் எஸ் கே பி கருணா,திருச்சி மத்திய மாவட்ட பொறியாளர் அணி தலைவர் இளங்கோவன், அமைப்பாளர்கள் புருஷோத்தமன், ரமேஸ், ஜியாவுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.