மஞ்சள் ஒட்டும் பொறி: வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்

0 223
Stalin trichy visit

திருச்சி, செப். 23  விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறி செயல்விளக்கம் செய்து காட்டிய வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டும் பொறி செயல்விளக்கம் செய்து காட்டிய வேளாண் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள்.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இளங்கலை வேளாண்மை இறுதி ஆண்டு மாணவிகள் விசாலினி, விக்னேஷ்வரி, அபிநயா, கயல்விழி, ரேணுகா தேவி ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மண்மண்ணச்சநல்லூர் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விவசாயம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஞ்சள் ஒட்டும் பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர்.
இது குறிப்பாக அசுவினி மற்றும் இலைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருப்பதால் பூச்சிகளை தன்னை நோக்கி ஈர்க்கிறது, அவை நெருங்கியவுடன் காகிதத்தின் மேற்பரப்பில் உள்ள பசையில் ஒட்டிக் கொள்ளும்.
இது இரசாயன அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கிறது. இதனை ஒரு ஏக்கருக்கு நாங்கு முதல் ஆறு வரை வைக்கலாம் என மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.