பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியபாமா. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் பின்பக்கம் உள்ள சுவரை தாண்டி வந்த இரண்டு நபர்கள் சத்தியபாமா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சத்தியபாமா கூச்சலிட்டதால் அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலின் பேரில் அவர்கள் இருவரும் அதே ஊரை சேர்ந்த ஜீவானந்தம்(20) மற்றும் தினேஷ்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சத்யபாமாவின் மகன் புகழேந்தி கொடுத்த புகாரின்பேரில் இருவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.