தந்தை பெரியார் பிறந்த நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி,செப். 16 திருச்சி மாநகராட்சியில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 17. 9 .2024 அன்று விடுமுறை தினம் என்பதால் இன்று 16. 9. 2014 மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை மேயர் மு.அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் ,துணை மேயர் திருமதி. ஜி. திவ்யா , துணை ஆணையர் கே. பாலு , நகர் நல அலுவலர் மணிவண்ணன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ,பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.