தந்தை பெரியார் பிறந்த நாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 143
Stalin trichy visit

திருச்சி, செப். 16  திருச்சி தெற்கு  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கழக தலைவர் அவர்கள் அறிவித்தற்கிணங்க மறைந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 17.09.24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம். சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகர கழகத்துக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து “சமூக நீதி நாள் உறுதி மொழியை” ஏற்றுக் கொள்வார்கள் .

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட,மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி,ஒன்றிய,நகர, பேரூர்,வட்ட,வார்டு,கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட,தொகுதி அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக தொன்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.