சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது

0 379
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(61). இவர் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம்போல் சௌந்தர்ராஜன் காலை சூப்பர் மார்க்கெட்டை திறப்பதற்காக வந்து பார்த்தபோது சூப்பர்மார்க்கெட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபொழுது சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது உள்ளது. பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சூப்பர்மார்க்கெட் உடைத்து உள்ளே வந்த பூலங்குடி காலனியை சேர்ந்த ரமேஷ் மகன் சச்சின்(20), அவரது நண்பர் நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்த குமார் மகன் வின்சென்ட்(19), திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் சந்தோஷ்(19) ஆகிய 3 பேரும் சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையில் இருந்த கல்லாப்பெட்டி பார்துள்ளனர். கல்லாவில் ஒன்றும் இல்லாததால் கடையில் இருந்த பழங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் சௌந்தர்ராஜன் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.