மணப்பாறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி தீர்மானம்
திருச்சி, செப். 23 மணப்பாறை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பு தீர்மானம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஊராளி கவுண்டர் சமுதாய பள்ளி மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராளி கவுண்டர் சமுதாய மக்கள் அரசின் சேவைகள் மற்றும் சட்டம் சார்ந்த வழிகாட்டல்கள் பெற யூஜி ஆர் இணையதளம் மற்றும் சேவை மையத் திறப்பு விழா, தமிழ்நாடு ஊராளி கவுண்டர் கூட்டமைப்பிற்கு நிர்வாக குழு தேர்வு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் பரவினர் நல உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்கமாக மணப்பாறை நகரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக தாரை தப்பட்டை முழங்க திருமண மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கடவூர் தாலுகா, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள தென்பகுதி, மணப்பாறை தாலுகா ஆகியவற்றை ஒன்றிணைத்து மணப்பாறையை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.