மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டி

0 200
Stalin trichy visit

திருச்சி, செப். 23  மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை அணி முதலிடம். பெண்கள் பிரிவில் சென்னை அணி முதல் இடம் பிடித்தது. அமைச்சர் கே.என். நேரு இறுதிப் போட்டியை துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. இன்று இரவு நடந்த இறுதிச்சுற்று போட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியும், தஞ்சாவூர் பேக்கரும்பன்கோட்டை தமிழன்னை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி கோவை அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இதேபோல் தமிழன்னை ஸ்போர்ட்ஸ் கிளப் இரண்டாவது பரிசையும், சென்னை,மணப்பாறை கோவை அணிகள் தலா 3,4 5 வது இடங்களை பிடித்தது. இதேபோல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சென்னை எஸ்டிஏடி நியூ கல்லூரி அணியும், சென்னை ஜேபிஆர் யூனிவர்சிட்டி அணியும் மோதின. இதில் சென்னை எஸ்டிஏடி அணி முதலிடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை சென்னை ஜேபிஆர் யூனிவர்சிட்டி அணியினரும், மூன்றாவது இடத்தில் கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர் கல்லூரி அணியினரும், நான்காவது பரிசை சென்னை பனிமலர் அணியினரும், ஐந்தாவது இடத்தை மதுரை அமெரிக்கன் காலேஜ் அணியினரும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கத் தொகை மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியை ஏராளமான இந்த கைப்பத்து போட்டியை கண்டு ரசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.