மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்
வந்தே பாரத் திட்டத்தின் வாயிலாக பல்வேறு வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் முதல் முறையாக மாலத்தீவில் இருந்து வந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று( ஜூன் 25) வருகை தந்தது.
இந்த விமானத்தை வரவேற்கும் விதமாக திருச்சி விமான நிலையம் சார்பாக 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரத் திட்டத்தின் கீழ் 146 பயணிகள் திருச்சி வருகை தந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. வருகை புரிந்த பயணிகளை விமான நிலைய ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

