மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன் மணப்பாறை எம்.எல்.ஏ. சந்திப்பு

0 771
Stalin trichy visit

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப, அப்துல் சமது அவர்கள் இன்று (25.06.2021) சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.

 

 மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்சேய் நல பிரிவிற்கு தனியாக புதிய கட்டிடமும், விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டிடமும், மருத்துவமனையில் குறைவாக உள்ள அறுவை சிகிச்சை கூடங்களை (operation theatre)  அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
சந்திப்பில் திருச்சி மாவட்ட மமக செயலாளர் பைஸ் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் அனிபா, தென்சென்னை மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா, உள்ளிட்டவர்கள் உடன் இருந்தானர்.

Leave A Reply

Your email address will not be published.