பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்த நூதன போராட்டம்!!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இன்று DYFI அமைப்பினர் சார்பாக ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 ரூபாய்க்கு மேல் வரலாறு காணாத பெட்ரோல், டீசல்,கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மோடி அரசை கண்டித்து திருச்சி காட்டுர் பகுதிக்குழுவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பாக அரியமங்களம், பெட்ரோல் பங்க் அருகில் டீசல் இல்லாமல் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் கண்டன முழக்கம் எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காட்டுர் பகுதிக்குழு செயலாளர் ஆதம் தீன், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாநகர் மாவட்ட து.தலைவர் கிச்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.