மணப்பாறையில் நிலத்தரகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 352
Stalin trichy visit

மணப்பாறையில் பத்திர பதிவுத்துறை மற்றும் வருவாய் துறையினரைக் கண்டித்து நிலத்தரகர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மணப்பாறை நகரத்தின் நத்தம் வார்டு டி,இ,எஃப்,ஜி மற்றும் நகர புல எண் போன்ற நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாததால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தங்களது நிலங்களை விற்க எண்ணும் பொதுமக்கள் பத்திரம் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களது அவசர பண தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நில ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் பத்திர பதிவுத்துறை சார் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறையினரைக் கண்டித்து இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நில தரகர்கள் நல சங்கத்தினர் இன்று மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கம் எழுப்பினர். பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் நாள் முழுவதும் அலுவலகத்தில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் அலுவலகத்தில் இல்லாததால் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். மெத்தனமாக செயல்படும் சார்பதிவாளரை பணிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முழக்கமிட்டனர். இதில் 100 ற்கும் மேற்பட்ட நிலத்தரகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.