வாலிபரிடம் கத்தி முனையில் வழிப்பறி : ரவுடிகள் உள்பட 4 பேர் கைது

0 190
Stalin trichy visit

திருச்சி செப்.24- திருச்சி கொட்டப்பட்டு ஜீவா தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 20). பெயிண்டர். இவர் திருச்சி பொன்மலை பீட்டர் தேவாலயம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தி முனையில் இவரை மிரட்டி பணத்தைப் பறித்து விட்டனர். இதுகுறித்து ரமேஷ் பொன்மலை போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் வழக்கு பதிந்து இது தொடர்பாக பொன்மலைபட்டியைச் சேர்ந்த ராஜா என்கிற கோப்பு ராஜா, ஜெயசூர்யா,சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சாருக்கான் பொன்மலை பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் இதில் ராஜா, ஜெயசூர்யா ஆகிய இருவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.