வனஉயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, அக். 7 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வனஉயிரின வார விழாவை முன்னிட்டு மணப்பாறை வனச்சரகத்தின் சார்பில் அரசு வன வளங்களை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் மேரிலென்சி கொடியசைத்து துவக்கி வைத்த பேரணியானது புத்தாநத்தம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து துவங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. ஊர்வலத்தின் போது வன வளங்களையும், வன உயிரினங்களையும் காப்பதன் அவசியத்தை விலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. இதில் திரளாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.