மணப்பாறையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
திருச்சி, அக். 7 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. கோவில்பட்டி சாலையில் இருந்து துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக லெட்சுமநாராயணன் நகர் அருகே வரை சென்று மீண்டும் மதுரை சாலையில் உள்ள ராஜிவ்நகர் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஊர்வலத்தின் நிறைவாக தனியாருக்கு சொந்தமான திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.