திருச்சி ஜங்சன் பழைய ரயில்வே பாலம் நாளை நள்ளிரவு முதல் மூடல்: போக்குவரத்து மாற்றம்

0 558
Stalin trichy visit

திருச்சி, அக். 11 திருச்சி ஜங்சன் அருகேயுள்ள பழைய ரயில்வே பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைப்பதற்காக அவ்வழியேயான வாகனப் போக்குவரத்து நாளை (அக்.12) நள்ளிரவு முதல் மாற்றப்படவுள்ளது.
திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள பழைய ரயில்வே பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் அமைக்க முதல் கட்டமாக அமைக்கப்பட்ட அரிஸ்டோ ஆக்டோபஸ் பாலம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இரண்டாம் கட்டமாக பழைய பாலத்தை அகற்றிவிட்டு ரூ.138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கவிருப்பதால், அவ்வழியேயான போக்குவரத்து சனிக்கிழமை இரவு 12 மணி முதல் மாற்று வழியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம்: அதன்படி சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை வழித்தடங்களிலிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்து நீங்கலாக) டி.விஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை அஞ்சலகம், கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண் டானா, ஆட்சியரகம், மிளகுப்பாறை வழியாக பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். எதிர்மார்க்கத்தில் குரு உணவகம், முத்தரையர் சிலை, டி.விஎஸ் டோல்கேட் வழியாகச் செல்ல வேண்டும்.
திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மிளகுப்பாறை, கோரிமேடு வழியாக பாலத்தின் கீழ் பகு தியைக் கடந்து இணைப்புச்சாலை வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிர்மார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வரும் பேருந்துகள் பாலம் ஏறாமல், கோரிமேடு, மிளகுப்பாறை வழியாக மத்தியப் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.

மதுரையிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து இலகு ரக வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலம் வழியாகச் சென்று பாலத்தில் உள்ள ரவுண்டானா வழியாக ஜங்சன் மார்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன், மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
எதிர்மார்க்கத்தில் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள், மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டிபுதூர் செல்லும் இலகு ரக வாகனங்கள் நிலையத்தின் பின்புறம் வஉசி சாலையில் சென்று, காமராஜர் சிலை வழியாக அரிஸ்டோ மேம்பாலத்தில் ஏறி இறங்கி மன்னார்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.

சரக்கு மற்றும் கனரக வாகனங்கள்: சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மன்னார்புரம் வழியாக மதுரை சாலையில் சென்று, மணிகண்டத்தில் வலப்பு பாம் திரும்பி வண்ணாங்கோயிலை அடைந்து திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிர் மார்க்கத்தில் இதே பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இதே வழியில் சென்று மன்னார் புரத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.