இருங்களூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை விபத்தில் தாய்-மகன் பலி.

0 646
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி. சிறுவனின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்தார்.இருசக்கர வாகனத்தில் வந்த அண்ணன் மற்றும் அண்ணன் மகன் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

 

சமயபுரம் மருதூர் சாலையை சேர்ந்தவர் துரைராஜ் (42) கூலித்தொழிலாளி.இவருடைய மனைவி சரோஜா(35)  மகன் தனபால்(9)  இருவரும்  பெரம்பலூர் மாவட்டம்  செட்டிகுளம் அருகில் உள்ள நாட்டார் மங்கலத்திற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துக்க நிகழச்சிக்காக சென்று இருந்தனர்.
இந்நிலையில் துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று தனது அண்ணன் ராமசாமியுடன் சரோஜா மற்றும் சரோஜாவின் மகன் தனபால் அவருடைய அண்ணன் மகன் விஷ்ணு நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் செட்டிகுளத்திலிருந்து சமயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருங்களூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால்  சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் 9 வயது சிறுவன் தனபால் லாரி டயரில் சிக்கி  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.தாய் சரோஜாவிற்கு இரண்டு கால்களும் நசுங்கிய நிலையில்  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மகன் விஷ்ணு ஆகியோர் ரத்தக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.