திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 இல் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருச்சி, அக். 16 வடகிழக்கு பருவ மழையையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமானஅன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருச்சிமாநகராட்சி மண்டலம் 3 க்கு உட்பட்ட 13 வார்டுகளுக்கான, மழைநீர் வெளியேற்றும் மோட்டார் பம்ப் செட்டுகள் ,மரம் அறுக்கும் இயந்திரம் ஆகியவை முன்னெச்சரிக்கைக்காக மண்டலம் 3 அலுவலகத்தில் தயார் நிலையில் இருப்பதை மாநகராட்சி மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.