முதலமைச்சரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை – துரை வைகோ பேட்டி
திருச்சி, ஜூன் 6 முதலமைச்சரை சந்தித்தது தொகுதியின் கோரிக்கைகள் குறித்து பேச தானே தவிர அவரிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை – துரை வைகோ பேட்டி
திருச்சி எம்.பியும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேவையான திட்டங்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் விவாதித்தேன்.குறிப்பாக
விமான நிலைய ஓடு தள விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், உலர் துறைமுகம் திருச்சியில் அமைக்க வேண்டும், திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மின்சார வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தேன். அவரிடம் கோரிக்கையை வைத்தவுடன் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது முதல்வர் ஏற்கனவே கூறியது போல இந்த அரசு குதிரை பேரரசல்ல குதிரை வேகத்தில் செயல்படக்கூடிய அரசு என்பதற்கு இதுவே சாட்சியாக உள்ளது
முதல்வரிடம் கோரிக்கைகள் தொடர்பாகத்தான் விவாதித்தேன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.
இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்.
அண்ணாமலை மதச்சார்பற்ற, வளர்ச்சி அரசியலை முன்னிருத்தி அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது அப்படிப்பட்ட அரசியலை முன்னெடுத்தால் அதை ஆரோக்கியமான அரசியலாக தான் பார்க்கிறேன்.
இதுவரை பாஜகவில் இருந்துவிட்டு திடீரென மதச்சார்பற்ற அரசியலை எப்படி செயல்படுத்த போகிறீர்கள் என்பதை அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
காங்கிரஸ் மீது உள்ள மன வருத்தத்தின் காரணமாக திமுக இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்காக அரசியலைக் கடந்து அனைத்து இயக்கங்களும் ஒன்றிணை வேண்டும் வரும் காலத்தில் அது நடக்கும் என நம்புகிறேன்.
நிர்பந்தத்தின் காரணமாக தான் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். கட்சி அங்கீகாரம் தொடர்பாக ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம் அப்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அதற்கு அனுமதி வழங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தினார்கள் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சரை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதில் எங்கள் கட்சியினருக்கு மிகுந்த மன வருத்தம் உள்ளது.
இன்றுவரை நாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்.
வரும் 27ஆம் தேதி நடைபெறும் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறைந்து விவாதிக்க இருக்கிறோம். அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது கட்சியின் அடுத்த கட்ட நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்தும் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்