ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
திருச்சி, அக். 16 திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ள த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இருதயராஜ் தேவகுமாரன் தலைமை வசித்தார்.
ஆசிரியர்கள், சுப்ரமணி, சாந்தி, ஆனந்தம் , சுப்ரமணி, சுதாகர்,சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டதாரி ஆசிரியை தனலட்சுமி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்து சிறப்புரையாற்றி பேசினார். தொடர்ந்து அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.