அரசு மணிமண்டபத்தில் செய்தித்துறை அமைச்சர் ஆய்வு

0 148
Stalin trichy visit

திருச்சி அக் 19 திருச்சியில் உள்ள மணி மண்டபங்கள் செய்தித் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதி கட்சியின் வைரத்துண் என்று அழைக்கப்படும் சர் ஏ டி பன்னீர்செல்வம், மற்றும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மணிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் இன்று பெரும்பிடுகு முத்தரையர், சார் ஏடிபி தியாகராஜன், நடிகர் தியாகராஜ பாகவதர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுவாமிநாதன் பெரும்பிடுகு முத்தரையர், சர்பிடி தியாகராஜன் மற்றும் தியாகராஜ பாகவதர் ஆகியோரின் சிலை அமைக்கப்பட்ட மணிமண்டபங்கள் கிடப்பில் கிடந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் தலைமையிலான திராவிட மடல் அரசு பொறுப்பேற்ற பிறகு மீண்டும் தேவைப்பட்ட நிதியை ஒதுக்கி 3மணி மண்டங்களை ஒரே நாளில் திறந்து வைத்தார். அவற்றை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

திருச்சியில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை குறித்த கேள்விக்கு?

தமிழ்செய்தி துறைக்கு மூலம் நிறுவப்படுகிற சிலை மட்டும் எங்களது கவனத்திற்கு வரும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவாஜி சிலை குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகமும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப்குமார் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.