திருச்சி மாவட்டத்தில் நவ.23 இல் கிராம சபை கூட்டம்

0 230
Stalin trichy visit

திருச்சி, நவ. 12 திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நவ.23 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிபில், மேலும் தெரிவித்துள்ளதாவது :
திருச்சி மாவட்டம் சார்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியின் வளர்ச்சியில் முதுகெலும்பாக திகழும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் கூட்டாண்மை வாழ்வாதாரம் போன்றவற்றை கிராம சபையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நவ.23 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.