சாலையை சீரமைக்கக் கோரி சி.பி.ஐ.(எம்.எல்) கட்சியினர் மனு
திருச்சி, ஜன.3 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சி.பி.ஐ.(எம்.எல்)) கட்சியின் சார்பாக மணப்பாறை நகர பகுதிகளில் தார்சாலை மாரியம்மன் கோவில் ரோடு மணப்பாறை பேருந்து நிலையம் செல்லும் வழி மற்றும் திருச்சி செல்லும் கோவில்பட்டி சாலை ஆகிய பகுதி சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஒட்டிகளும் கீழே விழுவதும் காயங்கள் ஏற்படுவதும் மருத்துவமனைக்கு செல்லும் சாலையும் அமைந்துள்ளது பொதுமக்களும் அவதிபடும் நிலையில் சேதம் அடைந்த சாலைகளை சீர் செய்துகொடுக்க சாலை சீர் செய்யும் விரைந்து முடிக்க வேண்டும் நெடுஞ்சாலைதுறையிடம் நகர செயலாளர் பி.பாலு தலைமையில் மனு அளிக்கபட்டது. நிகழ்வில் மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் இளையராஜா மற்றும் தோழர்கள் பங்கேற்பு