கிழக்குத் தொகுதி தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிரச்சாரம்
திருச்சி, ஏப்.20 திருச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலையொட்டிதமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கில் போட்டியிடும் இனிகோ இருதயராஜிற்கு உதயசூரியன் சின்னத்தில் திருச்சி பாலக்கரையில் உள்ள செங்குளம் காலனியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது திருமாவளன் பேசுகையில், புரட்சிகரமான திட்டங்கள் தொடர வேண்டும், மகளிர் உரிமைப் பயணம், மகளிர் உரிமை தொகை ரூ. 1000லிருந்து ரூ. 2000 ஆக உயர்த்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் என இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் திட்டங்களையும் புரட்சிகர திட்டங்களை வறையறுத்து பெண்களை வலிமைப்படுத்தும் விதமாக ஏராளமான திட்டங்களை சாதித்து காட்டியுள்ள முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி அவரது ஆட்சி தொடர வேண்டும். திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அவரது ஆட்சி தொடர்வதற்குமு க ஸ்டாலின் ஆசி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்தவர் நல்லெண்ண இயக்கத்தின் நிறுவனர் இனிகோ இருதயராஜிற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
பா.ஜ.க.வை முதுகில் சுமந்து வரும் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். கிறிஸ்தவ நிறுவனங்கள் அயல்நாடுகளில் இருந்து உதவி பெறும் நிறுவனங்களை முடக்கிப் போட்டு இருக்கும் அரசு பாஜக. கிறிஸ்தவர்களை வெறுக்கின்ற கட்சி, பைபிளை கொளுத்துகின்ற கட்சி, தேவாலயங்களை இடிக்கிற கட்சி கிறிஸ்தவருக்கு எதிரான மதவாத, வெறுப்பு அரசியலை அரசியலை பரப்புகிற கட்சி பாஜக. அந்தக் கட்சியை தான் அதிமுக தோளில் தூக்கி சுமக்கிறது. அந்தக் கட்சிக்கு மறைமுகமாக துணை போகிறவர் தான் நடிகர் விஜய். அவர் பெயர் ஜோசப் விஜய். தலித் கிறிஸ்தவர்களுக்காக நான் (திருமாவளன்) தொடர்ந்து போராடி வருகிறேன். கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியல் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் விடுதலை சிறுத்தைகள் போராட்டங்களில் பங்கேற்று வருகிறோம்.
என்றைக்காவதும் விஜயும் எடப்பாடி பழனிச்சாமியும் இதனைப் பற்றி பேசி இருக்கிறார்களா. இன்று நான் எட்டு தொகுதிகள் வாங்கி உள்ளேன். அதில் 2 தொகுதி பொதுத் தொகுதி ஒரு தொகுதியில் இஸ்லாமிய போட்டியிடுகிறார், இன்னொரு திருப்பேரூர் தொகுதியில் தலித் கிருஸ்தவரான பன்னீர்தாஸ் போட்டியிடுகிறார். ஜோசப் விஜய் அடையாளம் இல்லாமல் வாக்கை பிரிக்க முயற்சிக்கிறார். அவர் திட்டத்தை கொண்டு வந்த பாஜகவை விமர்ச்சித்ததில்லை. இஸ்லாமிய வாக்குகளை திட்டமிட்டு பிரிப்பதற்காக திமுகவின் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கட்சி தொடங்கியவர் விஜய். கிறிஸ்தவ சொந்தங்களே உங்கள் வாக்குகளை வீணாக்காமல் இரட்டை இலைக்கு போட்டாலும் அது பிஜேபிக்கு போய் தான் சேரும், விஜய்க்கு போட்டாலும் அது பிஜேபிக்கு போய் தான் சேரும். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என உரையாற்றினார்.
வாக்கு சேகரிப்பின் போது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்கள் கனியமுதன் புல்லட் லாரன்ஸ், புறநகர் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர், சுபாசதீஷ், மரியகமல்,மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.