மாட்டு வண்டியில் வந்து பொங்கல் விழா கொண்டாடிய அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி, ஜன. 13 திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு மாட்டு வண்டி ஒட்டி வந்து பங்கேற்பு
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மிளகு பாறையில் உள்ள கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை இணைந்து இன்று பொங்கல் விழாவை கொண்டாடினார்கள்.
இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் இருந்த மாட்டு வண்டியில் ஏறி மாட்டு வண்டியை ஒட்டி விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் கல்லூரி வளாகத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து போட்டிருந்த கோலங்களை பார்வையிட்டு சிறந்த கோலங்களுக்கு முதல் மூன்று பரிசுகளை வழங்கி அவர்களை பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து கண்களை கட்டிக்கொண்டு உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரே அடியில் பானையை உடைத்தார். மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கயிறு இழுக்கும் போட்டியை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து நெருப்பு மூட்டப்பட்டு பொங்கல் தயாரிக்க தயாராக இருந்த பாணையில் பொங்களுக்கான அரிசியை அள்ளிப்போட்டு அங்க இருந்த ஊழியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்..
இந்தநிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், திருச்சி அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் குமரவேல் துணை முதல்வர் அர்ஷத் பேகம், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்..