பெரியார் குறித்த விவாதம் அவசியம் : பாஜக மாநில பொதுச் செயலாளர்
திருச்சி, ஜன. 13 பெரியார் குறித்த விவாதம் அவசியம் – பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி
திருச்சி வாமடம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார். . தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் குறித்து அவர்களது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் திருப்தி இல்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரிந்து பல்வேறு கட்சியில் சேர்ந்த வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தற்போது 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
என கூறினார்.
பெரியார் கொடுத்த சர்ச்சை பேச்சுக்கள் பெரியார் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பது குறித்து விவாதம் செய்ய ஏதுவாக உள்ளது இதன் மூலமாக பெரியார் என்ன செய்தார் என்பது தெரியவரும் எனக்கூறினார்.