கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜன. 30 திருச்சியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சமூகவிரோதியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். திருச்சி உறையூர்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து உறையூர் காவல்துறையினர் நவாப் தோட்டம் பகுதியில் நேற்று சோதனை நடத்தச் சென்றனர். அப்போது அங்கு பிடிபட்ட ஒருவரிடம் நடத்திய விசார ணையில், அவர் தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும், அவர் கஞ்சா விற்கும் அவர் ரௌடிகள் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து 1.10 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், ஊசிக ளைக் கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய பாலக்கரை காஜாபேட்டை பகுதி நாகராஜ், ஜிஜூ ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.