திருச்சியில் 3 குழந்தைகளின் தாய் மாயம்

0 279
Stalin trichy visit

திருச்சி ஜன.30 ஸ்ரீரங்கம் முல்லை நகரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி (40) என்பவர் மாயமானார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில்  திருச்சி அரியமங்கலம் பட்டையதார் தெருவை சேர்ந்தவர் கமருதின் . இவரது மகன் ரஹ்மத்துல்லாஹ் (வயது 34). குடிப்பழக்கம் உடையவர். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஹமத்துல்லாஹ் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி பரக்கத் நிஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.