பெரியாரை எதிர்ப்பவர்கள் பண்டிதர் அயோத்திதாசரையும் விமர்சிக்க வேண்டும் : தொல்.திருமவளவன் எம்.பி. பேச்சு
திருச்சி, ஜன.30 பெரியாரை எதிர்ப்பவர்கள் பண்டிதர் அயோத்திதாசரையும் விமர்சிக்க வேண்டும் என்று மணப்பாறையில் தொல்.திருமவளவன் எம்.பி. பேச்சு – திருமாவளவன் பேச்சு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆதிதிராவிடர் நலப் பேரவையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு எடத்தெருவில் நடந்த விழாவில் பேரவையின் தலைமையகத்தில் வெள்ளி விழா ஆண்டு கல்வெட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மணப்பாறை பெரியார் சிலை அருகே வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் ஆதிதிராவிடர் நலப்பேரவை நிறுவனத்தலைவர் ஆதிபெருபழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தொல். திருமாவளவன் பேசியபோது,
திராவிடம் என்பது பெரியார் கண்டுபிடித்த சொல் அல்ல. திராவிடம் என்ற சொல் வேண்டாம் என்றால் அதனை புழக்கத்துக்கு கொண்டுவந்த பண்டிதர் அயோத்திதாசரைத்தான் விமர்ச்சிக்க வேண்டும். பண்டிதர் அயோத்திதாசரை இவர்களால் விமர்சிக்க முடியாது. அது மிகவும் ஆபத்தானது. பெரியாரை எதிர்ப்பார்கள், புரட்சியாளர் அம்பேத்கரை வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். பாஜகவினர் பெரியாரை விமர்சிப்பார்கள் ஆனால் அம்பேத்கரை விமர்ச்சனம் செய்ய மாட்டார்கள்.
ஆர்எஸ்எஸ் கார்களும் அப்படித்தான், ஏனென்றால் இந்தியா முழுவதும் இருகின்ற 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அம்பேத்கரை குலதெய்வமாக ஏற்று வணங்கி வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் இவர்களால் பகைத்துக் கொள்ள முடியாது. பெரியார் பேசியதைத்தான் பண்டிதர் அயோத்திதாரும் பேசினார். பெரியாரை விமர்சிக்க வேண்டும் என்றால் பண்டிதர் அயோத்திதாசரையும் விமர்ச்சியுங்கள் மேடையில் பேசுவோம். இந்த இயக்கம் புரட்சியாளர் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும், மாமேதை மார்ச் ஆகிய மூவரையும் கொள்கை ஆசான்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தலித் அல்லாதவர்களையும் இடதுசாரி சிந்தனை உள்ளவர்களையும் அரவணைத்து ஒருங்கிணைந்த எழுச்சியை இந்த மண்ணில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில். பார்ப்பனியம் என்ற ஆரியம் இருக்கும் வரை உழைப்பவன் உழைத்துக் கொண்டே இருப்பான் உண்டு கொழுத்தவன் உண்டு கொழுத்துக் கொண்டே இருப்பான்.
பொடா சட்டம் இருக்கும் போதே ஈழத்துக்கு சென்று விட்டு திரும்பியவன் நான். ஒரு அண்ணன் இங்கே இருக்கிறேன் நீங்கள் தைரியமாக போராடுங்கள் உங்களை ஒரு நாள் ஒட்டுமொத்த தமிழகமும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் என்று சொன்னவர்தான் பிரபாகரன்
இது ஆமைக்கறி கதையல்ல. எட்டுக்கட்டி பேசுபவன் அல்ல நான். எனக்கும் உண்மையிலேயே உணவு பரிமாரினார். சாதிப்பற்றோடு ஒரு அரசியல் இயக்கம் இருக்குமேயானால் அது அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற முடியாது ஒரு சாதி சங்கமாக மட்டும் தான் இயங்க முடியும் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்ட நிலையில்தான் 25 ஆண்டு கால உழைப்புக்கு பிறகு பானை சின்னம் சொந்த சின்னமாக கிடைத்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. என அவர் பேசினார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பேரவையினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.