சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0 480
Stalin trichy visit

திருச்சி, ஜன.30  திருச்சி மாவட்டம்,  துறையூர், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பெருமாள் மலை அடிவாரத்தில் ஆரம்பிக்கும் துறையூர்-பெரம்பலூர் செல்லும் சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

இந்த சாலையானது திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தாலும் மேற்கண்ட சாலையை காஞ்சிபுரம் வட்டம் கடலூர் கோட்டம் பெரம்பலூர் உட்கோட்ட அதிகாரிகள் சாலையை பராமரித்து வருகிறார்கள்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பற்றிய விழிப்புணர்வை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது
பெருமாள் மலை அடிவாரத்தில் ஆரம்பித்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சுமார் 600 மீட்டர்கள் வரை நடைபெற்றது.
இந்த பேரணியில் கிழக்குவாடியில் உள்ள திருமலை சீனிவாசா கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ் எம் கே கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி திருமலை சீனிவாசா பாரா மெடிக்கல் ஸ்கூல் ஆஃப் நர்சிங் கல்லூரி திருமலை சீனிவாசா கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடலூர் கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி பெரம்பலூர் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி நளினா கல்லூரி நிறுவனர் மருத்துவர் சீனிவாசன்
செயலர் மணிமேகலை ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

சுமார் 600 மீட்டர்கள் நீளமுள்ள இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு வாசகங்களை பற்றிய செய்திகள் குறித்த பதாகைகள் ஏந்தியும், சிறிய ரக ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்தும் சாலையில் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் சென்றனர்.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும் அதனால் தனி மனித உயிர் பாதுகாப்பு பற்றிய செயல்முறைகளையும் தெரிவித்தனர்.

இலகுரக வாகனங்களான கார் வாகன ஓட்டிகளிடம் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

நகர எல்லைக்குள் வாகனத்தை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் சாலையை கடக்கும் போது இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்பதை பார்த்து கடக்க வேண்டும் சாலையில் வாகனத்தை இயக்கும்போது வலது புறம் அல்லது இடது புறம் திரும்பும் போது கண்டிப்பாக சைகை காமிக்க வேண்டும் மேலும் வாகனத்தில் உள்ள எச்சரிக்கை விளக்குகளை உபயோகிக்க வேண்டும் இரவு நேரங்களில் முகப்பு விளக்குகளை எதிரே வரும் வாகனம் செல்லும் வகையில் வெளிச்சத்தை குறைத்து இயக்க வேண்டும் போன்ற தகவல்களை பேரணியில் தொடர்ந்து பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கேட்கும் வகையில் தெரிவித்துச் சென்றார்கள்.
துறையூர் காவல் உதவி ஆய்வாளர் கல்லூரி மாணவிகளிடம் சாலைகளை பயன்படுத்தும் முறைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.

எஸ் எம் கே கலை அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பேரணிக்கு ஏதுவாக மாணவிகள் எளிதில் செல்லும் வகையில் வாகன இடையூறு ஏற்படாமல் துறையூர் நிலைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டார்கள்.

மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய தகவல்களை தங்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் வீடு அருகில் குடியிருக்கும் நபர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதை குறித்த தகவல்களை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவாக சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில் பணியாற்றும் ஆனந்த் மற்றும் விவேக் பேரணிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.