தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை சிட்கோ நேர்த்திமிகு மையத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீசினிவாசன், பழனியப்பன், திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வகணேஷ் ஆகியோர் உள்ளனர்.