மாநகராட்சி அலட்சியத்தால் சுகாதாரக்கேடு : அமமுக மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு

0 195
Stalin trichy visit

திருச்சி, பிப்.12  திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இதற்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் இன்று பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் மாநகராட்சியின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமற்ற சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன்,அமமுக திருச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் தர்கா கலிபா சாதாத்,மாவட்ட மாணவரணி செயலாளர் நாகூர் மீரான், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.