100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சி ஊராட்சியில் வேங்கைகுறிச்சி மற்றும் இடையபட்டியான்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்று கூறி வந்த பின்னர் பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் தொழிலாளர்கள் வரவழைத்து ஏன் பணி வழங்கப்படவில்லை என்று கூறி மணப்பாறை– பழையகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனே ஊராட்சி செயலாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே பணி வழங்கிடப்படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டனர்.